குடும்ப அட்டைகள் வங்கிக்கணக்குடன் இணைக்கவில்லை: தமிழக அரசு விளக்கம்

குடும்ப அட்டைகளை வங்கிக்கணக்குகளுடன் இணைக்காத காரணத்தால் ரூ.1000 வங்கியில் செலுத்தப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 
chennai High Court
chennai High Court
Published on
Updated on
1 min read

குடும்ப அட்டைகளை வங்கிக்கணக்குகளுடன் இணைக்காத காரணத்தால் ரூ.1000 வங்கியில் செலுத்தப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

கரோனா பாதித்த ஒருவர் நியாய விலைக் கடைக்கு வந்தால் பலருக்கு கரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது எனவும், எனவே, ரூ.1000 நிவாரணத் தொகை, ரேஷன் பொருட்களை நேரில் சென்று வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குடும்ப அட்டைகளை வங்கிக்கணக்குகளுடன் இணைக்காத காரணத்தால் ரூ.1000 வங்கியில் செலுத்தப்படவில்லை. வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்க அவகாசம் இல்லை என்பதால் கடைகளில் ரூ.1000 தரப்படுகிறது. 

கணக்கெடுக்க ஒருமாதம் ஆகும் என்பதால் தற்போது அதை செய்யவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com