மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் ஐந்து கடைகளுக்கு சீல் வைப்பு

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 
மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் ஐந்து கடைகளுக்கு சீல் வைப்பு
Published on
Updated on
1 min read

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 

மதுரையில் 144 தடை உத்தரவை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதில் மளிகை பொருட்கள் காய்கறி மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மளிகை பொருட்கள் காய்கறி விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்ற நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு இயங்கும் கடைகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதில் பல்வேறு கடைகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்ற புகார் எழுந்து உள்ளது. மேலும் கடைகளில் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்குவதாகவும் இதன் மூலம் சரவணா கருணா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

சமூக இடைவெளியில் கடைபிடிக்காத கடைகளை ஊட்டி செல்வக்குமார் சீல் வைக்குமாறும் மாநகராட்சி ஆணையர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் திங்கட்கிழமை அதிகாலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இயங்கி வந்த ஐந்து கடைகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறது தெரியவந்தது. இதையடுத்து ஐந்து கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர். 

மாநகராட்சி அதிகாரிகள் மறுஉத்தரவு வரும்வரை கடையை திறக்கக் கூடாது என்று எச்சரிக்கை நோட்டீஸ்  ஓட்டினர். மதுரை நகர் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com