தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட 328 பேர்

சென்னையில் இருந்து இரண்டு விமானங்களில் வெள்ளியன்று  328 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2020, 4:21 pm

சென்னை: சென்னையில் இருந்து இரண்டு விமானங்களில் வெள்ளியன்று  328 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 6771 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 228 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் இருந்து இரண்டு விமானங்களில் வெள்ளியன்று  328 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

சென்னையில் இருந்து ஸ்கூட் டைகர் ஏர்லைன்ஸ் மற்றும் ராயல் பூட்டான் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் சார்பில் வெள்ளியன்று விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் ராயல் பூட்டான் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் இயக்கத்தை ஏர் இந்தியா நிறுவனமே முழுமையாக கவனித்துக் கொண்டது.

ஸ்கூட் டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 248 பேர் சிங்கப்பூருக்கும், ராயல் பூட்டான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 80 பேர் பூட்டானின் பரோ நகரத்திற்கும் புறப்பட்டுச் சென்றனர்.

இவர்கள் அனைவரும் கரோனா ஊரடங்கின் காரணமாக விமானப் பயனனகள் ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் சிக்கிக் கொண்ட சர்வதேசப் பயணிகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.