கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது

ஈரோடு பெருந்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது
Updated on
1 min read

ஈரோடு பெருந்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

ஈரோட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 60 பேரில் இருவர் கர்ப்பிணி பெண்கள். இதில் பெருந்துறையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

குழந்தை பிறந்த நிலையில், தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தையையும் தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைக்கு கரோனா தொற்று இருக்குமா என்பதை கண்டறிய 3 வாரங்கள் தேவை என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com