

தமிழகத்தில் இன்று புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:
'தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21,994 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 2,739 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இன்றைக்கு புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 34 பேருக்கு நேரடி பாதிப்பு, 3 பேர் வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள். மற்றொருவர் அரசு மருத்துவர்.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 37. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 118. உயிரிழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தமாக தமிழகத்தில் 26 ஆய்வகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே பரிசோதனை ஆய்வகங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். ஒரு நாளில் 5,320 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.
தமிழகத்தில் கரோனா உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் ஒருவர் 47 வயது நபர். மற்றொருவர் 59 நபர்.
தமிழகத்தில் தேவையான முகக்கவசம், உடல் பாதுகாப்பு கவசங்கள், பி.சி.ஆர் கிட் உள்ளிட்டவை போதுமானவையாக உள்ளது' என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பாதிப்பு: 1,242
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 14
குணமடைந்தோர் எண்ணிக்கை: 118
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.