சென்னையில் கரோனா பாதிப்பு 228 ஆனது; ராயபுரத்தில் மட்டும் 73

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை நிலவரப்படி 228 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு 228 ஆனது; ராயபுரத்தில் மட்டும் 73
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை நிலவரப்படி 228 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நேற்று 217 ஆக இருந்த மொத்த பாதிப்பு இன்று 228 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 73 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, திருவிக நகரில் 33 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 26 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 20, அண்ணா நகரில் 24, தேனாம்பேட்டை 19 பேருக்கும் கரோனா பாதித்துள்ளது.

இதுவரை மணலி மற்றும அம்பத்தூரில் கரோனா பாதிப்பு பதிவு செய்யப்படவில்லை.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டிவிட்டது. 1992 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,323 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மண்டல வாரியாக..

திருவொற்றியூர் - 5
மணலி - 0
மாதவரம் - 3 
தண்ட்டையார்பேட்டை - 20
ராயபுரம் - 73
திருவிக நகர் - 33
அம்பத்தூர் -  0
அண்ணா நகர் - 24
தேனாம்பேட்டை - 19
கோடம்பாக்கம் - 26
வளசரவாக்கம் - 5
ஆலந்தூர் - 3
அடையார் - 7
பெருங்குடி - 7
சோழிங்கநல்லூர் - 2
மற்றவர்கள் - 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com