கோப்புப் படம்
கோப்புப் படம்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: வாகன ஓட்டிகள் அவதி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு வாகன கட்டணங்கள் உயர்த்தி வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாவதோடு
Published on

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு வாகன கட்டணங்கள் உயர்த்தி வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாவதோடு சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் போக்கு உருவாகும் தற்போது சூழல் நிலவி வருகிறது. 

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 461 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 44 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது. மற்ற மாநிலங்களைவிட நெடுஞ்சாலையின் தூரம் குறைவாக உள்ள தமிழகத்தில் தான் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகமாக உள்ளதாக சமுக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சமுக வலைதளங்களில் பதிவிட்டும் அதை கேள்வியாகயும் எழுப்பி வருகின்றனர். 

இத்தகைய தகவல்களை அரசு ஆராய்ந்து கூறும்போது தான் உண்மைத்தன்மை தெரியவரும். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 முதல் 10 சதவீதம் சுங்ககட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்தே சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் நேரிடுவதும் அது சில இடங்களில் கைகலப்பாக மாறிவருவதும் வாடிக்கையாக தொடர்ந்து வந்ததது.

இது பழைய கட்டணவிபர அட்டவணை

இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காத நிலையில் இந்த  தாக்குதலை போக்கை கட்டுப்பதுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. இதனைத்தொடர்ந்து நாட்டின் அனைத்து சுங்கச்சாவடிகள் மூடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஏப், 19 ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக கடந்த சில நாள்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட கூடுதல் கட்டணமாக ரு, 5 முதல் 30 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 25 ந்து நாள்களாக பொருளாதார முடக்கத்தில் சிரமப்பட்டு வந்த வாகன ஓட்டிகளுக்கு இது மேலும் சிரமத்துக்குள்ளாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலை சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் போக்கு உருவாகும் சூழலை உருவாக்கிவிடும் என்பது கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்களை நாம் மறக்கமுடியாது. 

எனவே தற்போது பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசு கரோனா வைரஸ் தாக்கம் முடிவுக்கு வரும் வரை பழைய கட்டண முறை தொடர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com