கரோனா தடுப்புப் பணிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி

கரோனா தடுப்புப் பணிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். 
கரோனா தடுப்புப் பணிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி
Updated on
1 min read

கரோனா தடுப்புப் பணிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். 

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும், ஃபெப்சி நிறுவன ஊழியர்களுக்கு ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளார். 

அதேபோன்று கேரளத்துக்கு ரூ. 10 லட்சமும், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா ரூ. 5 லட்சமும் கரோனா தடுப்புப் பணிகளுக்கு நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். 

முன்னதாக மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்புப் பணிக்கு பிரபலங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தன. அதன்படி, பிரதமர் நல நிதிக்கும், முதல்வர் நிவாரண நிதிக்கும் பலர் நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com