சென்னையில் கரோனா பாதிப்பு 373 ஆக உயர்வு: மாவட்டவாரியாக நிலவரம்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சென்னையில் கரோனா பாதிப்பு 373 ஆக உயர்வு: மாவட்டவாரியாக நிலவரம்
Updated on
1 min read

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,596 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சாவூரில் 5 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், அரியலூர் மற்றும் திருவள்ளூரில் தலா இருவருக்கும், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:

வ.எண்

மாவட்டம்

21.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்22.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை35815373
2.கோவை134 134
3.திருப்பூர்109 109
4.ஈரோடு70 70
5.திண்டுக்கல்76177
6.திருநெல்வேலி62 62
7.செங்கல்பட்டு56 56
8.நாமக்கல்51 51
9.திருச்சி50151
10.திருவள்ளூர்48250
11.மதுரை46450
12.தேனி43 43
13.கரூர்42 42
14.நாகப்பட்டினம்44 44
15.ராணிப்பேட்டை39 39
16.தஞ்சாவூர்49554
17.தூத்துக்குடி27 27
18.விழுப்புரம்40141
19.சேலம்24 24
20.வேலூர்22 22
21.திருவாரூர்28 28
22.கடலூர்26 26
23.தென்காசி31 31
24.திருப்பத்தூர்17 17
25.விருதுநகர்19 19
26.கன்னியாகுமரி16 16
27.திருவண்ணாமலை12113
28.சிவகங்கை12 12
29.ராமநாதபுரம்11 11
30.நீலகிரி9 9
31.காஞ்சிபுரம்10111
32.பெரம்பலூர்5 5
33.கள்ளக்குறிச்சி5 5
34.அரியலூர்426
35.புதுக்கோட்டை1 1
 மொத்தம்1,596331,629

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com