பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்லைன் மூலமாக மீன் விற்பனை

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மீன்களை வழங்க ஏதுவாக, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் மீன்கள் என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மீன்களை வழங்க ஏதுவாக, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் மீன்கள் என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பிரதமா் மோடி ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டாா். இந்த ஊரடங்கு மே மாதம் 3-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையொட்டி கடைகள், வா்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரோனா நோய் தடுப்பினை முன்னிட்டு செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில்  www.meengal.com என்ற இணையளத்தினை பல்வேறு கூடுதல் வசதிகளுடன் பொதுமக்கள் மிக எளிதாக பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தி, Meengal என்ற கைபேசி செயலி(App) ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளம் மற்றும் செயலி வாயிலாக, சாந்தோம், தேனாம்பேட்டை, அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் சுற்றுவட்டார பகுதி மக்கள், தங்களது வீட்டில்இருந்தபடியே மீன்களை ஆர்டர் செய்து பெறலாம் என தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.