கோவையில் மூன்று காவலர்களுக்கு கரோனா பாதிப்பு

 கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் மூன்று காவலர்களுக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read


 கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கோவையில் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்குள் இயங்கும் காவல்நிலைய காவலர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் போத்தனூரில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஆண் காவலர் உட்பட மூன்று பேருக்கு கரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு இன்னும் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com