அமெரிக்கா: கடந்த 10 நாட்களில் கரோனா பலி எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு

அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்து உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்



வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்து உள்ளது. நோய்த்தொற்றுக்கு 9,25,232-5க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 பலியாகியுள்ளனர் என ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
  
உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,31,860-ஆக உயர்ந்துள்ளது, பலியானவர்களின் எண்ணிக்கை 1,97,314- ஐ கடந்துள்ளது. 

இந்த நிலையில் நோய்த்தொற்றுக்கு அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,000- ஐ தாண்டியது, இது கடந்த 10 நாட்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், 9,25,232- க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 2,000 பேர் இறந்துள்ளனர் என்றும், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், ஏனெனில் பெரும்பாலான மாகாணங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர், ஆனால் வீட்டில் இறந்தவர்கள் அந்த பட்டியலில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.  நியூயார்க்கில் மட்டும் சுமார் 40 சதவீதம் இறப்புகள் நிகழந்துள்ளன, அடுத்தப்படியாக, நியூஜெர்சி, மிக்சிகன் மற்றும் மாசசூசெட்ஸ் மாகாணங்களில் அதிகப்படியான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. 

1950-53 கொரியப் போரில் கொல்லப்பட்ட மொத்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையை விட அதிகமானோரை  கரோனா கொன்றுள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவை அடுத்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அதிகயளவில் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. 

நோய்த்தொற்றுக்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 20 நாடுகளில், தனிநபர் இறப்புகளின் அடிப்படையில் அமெரிக்கா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 10,000 பேருக்கு 1.5 பேர் இறந்துள்ளனர், 10,000 பேருக்கு ஐந்துக்கும் மேற்பட்ட இறப்புகளில் பெல்ஜியம் முதலிடத்திலும், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.

வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது,  கடந்த ஐந்து வாரங்களில் அமெரிக்காவில் வேலையின்மையால் அவதிபடுவோரின் எண்ணிக்கை 26.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

அமரிக்காவில் சில மாகாணங்களின் ஆளுநர்கள் வரவிருக்கும் வாரங்களில் தங்கள் பொருளாதாரங்களை மீட்கும் நடவடிக்கையாக ஊரடங்கை தளர்த்திக்கொள்ளலாம் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில்,   சுகாதார வல்லுநர்களும் சில மாகாண ஆளுநர்களும் ஊடரங்கு கட்டுப்பாடுகளை முன்கூட்டியே தளர்த்துவது புதிய நோய்த்தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருந்தாலும், அமெரிக்கர்கள் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com