சென்னை கோயம்பேடு சந்தை இடமாற்றம்? - நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை கோயம்பேடு சந்தையை கேளம்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெறும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 
சென்னை கோயம்பேடு சந்தை இடமாற்றம்? - நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

சென்னை கோயம்பேடு சந்தையை கேளம்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெறும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, சென்னை கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து, சந்தையை கேளம்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் அங்குள்ள வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

சந்தையில் மேலும் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் சந்தையை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதால் இடமாற்றம் அவசியம் என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com