கூத்தாநல்லூர் பகுதியில் மின்கம்பத்தில் பட்டம் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், மின் கம்பங்களில் பட்டங்கள் சிக்குவதால் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 
கூத்தாநல்லூர் பகுதியில் மின்கம்பத்தில் பட்டம் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், மின் கம்பங்களில் பட்டங்கள் சிக்குவதால் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 

இது குறித்து கூத்தாநல்லூர் மின்சார வாரிய உதவிப் பொறியாளர் எஸ்.சங்கர் குமார் திங்கள்கிழமை கூறியது. கூத்தாநல்லூர் அடுத்த வ.உ.சி.காலனியில், துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து, கூத்தாநல்லூர், பொதக்குடி ,அத்திக்கடை, வெள்ளக்குடி, கற்கோயில், பூதமங்கலம், சித்தாம்பூர், வடபாதிமங்கலம், சாத்தனூர் , பழையனூர், மூலங்குடி, குருவாடி, வேளுக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. 

கூத்தாநல்லூர் வட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கரோனா தொற்று நோயால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. மின்சாரப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 2019 கஜா புயலில் வயல்களிலும், சாலைகளிலும், தெருக்களிலும் சாய்ந்து போன மின் கம்பங்களை இரவு, பகல் பாராமல் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டோம். கரோனா தொற்று 144 தடை உத்தரவிலும் சரி, மற்ற விடுப்பு நாட்களிலும் காற்றாடிகளைப் பறக்க விடுகின்றனர். 

இந்தக் காற்றாடிகள் அறுந்தோ அல்லது மின் கம்பியில் மாட்டியோ விடுகிறது. மின் கம்பியில் காற்றாடிகள் மாட்டப்படுவதால், மின் கம்பிகள் ஒன்றோடு, ஒன்று இணைந்து, மின் தடை ஏற்படுகிறது. மேலும், மின் கம்பிகள் அறுந்து விழுந்து பெரும் விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது. கூத்தாநல்லூர் பகுதியில் விடப்படும் காற்றாடிகளை பறக்க விடாமல் இருக்க வேண்டும். மேலும், மின் தடை ஏற்பட்டால், திருவாரூரில் இயங்கும் தானியங்கி புகார் மையத்தில் உள்ள 04366 1912 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com