கோயம்பேடு அருகே முடிதிருத்தும் கடை நடத்தியவருக்கு கரோனா; தாமாக முன் வந்து தகவல் கொடுத்த 30 பேர்

சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 570 ஆக இருக்கும் நிலையில், கோயம்பேடு சந்தையில் கடை வைத்திருக்கும் மேலும் ஒரு வியாபாரிக்கும், இரண்டு காவலர்களுக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
pv27p2_2704chn_157_8
pv27p2_2704chn_157_8
Updated on
1 min read


சென்னை: கோயம்பேடு அருகே ஊரடங்கு உத்தரவை மீறி முடிதிருத்தும் கடையை திறந்து வைத்து வேலை செய்து வந்த அதன் உரிமையாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த சில வாரங்களில் அவரிடம் முடிதிருத்திக் கொண்ட மற்றும் அவரை வீட்டுக்கு வரவழைத்து முடிதிருத்திக் கொண்ட சுமார் 30 பேர் தாமாக முன் வந்து தங்களை கரோனா சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர். 

இதையடுத்து, வளசரவாக்கம், நெற்குன்றம், கோயம்பேடு பகுதிகளில் கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

மேலும், சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 570 ஆக இருக்கும் நிலையில், கோயம்பேடு சந்தையில் கடை வைத்திருக்கும் மேலும் ஒரு வியாபாரிக்கும், இரண்டு காவலர்களுக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கோயம்பேடு சந்தையில் இரண்டு வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 570-ஆக உயா்ந்துள்ளது. அம்பத்தூா் மண்டலத்தில் மட்டும் திங்கள்கிழமை (ஏப்ரல் 27) ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அந்த தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 1,937-ஆக அதிகரித்துள்ளது.

தலைநகா் சென்னையில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், தொடா்ந்து நான்காவது நாளாக மாநிலத்திலேயே அதிக பாதிப்பு அங்குதான் பதிவாகியுள்ளது.

அதன்படி திங்கள்கிழமை மட்டும் 47 பேருக்கு சென்னையில் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு நிறைந்த பகுதிகளில் நாள்தோறும் இரு முறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

81 போ் வீடு திரும்பினா்: கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 81 போ் பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,101-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 26 பேரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 20 பேரும் ஒரே நாளில் வீடு திரும்பியுள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

111 சிறாா் பாதிப்பு

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 111 சிறாா்களும், குழந்தைகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அவா்களில் ஆண் குழந்தைகள் 60 பேரும், பெண் குழந்தைகள் 51 பேரும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com