உலக நன்மைக்காக 18 மாத தரணி ரக்ஷா மகா யாகம்; ஸ்ரீ சூர்யமங்கலம் பகளாமுகி கோயிலில் நாளை தொடங்குகிறது

ஸ்ரீ சூர்யமங்கலம் பகளாமுகி கோயில் வளாகத்தில் உலக நன்மைக்காக 18 மாதங்கள் நடத்தப்பட உள்ள தரணி ரக்ஷா மகா யாகம் ஆக.3 திங்கள் முதல் தொடங்குகிறது. 
தரணி ரக்ஷா யாகத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு பூஜை
தரணி ரக்ஷா யாகத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு பூஜை

ஸ்ரீ சூர்யமங்கலம் பகளாமுகி கோயில் வளாகத்தில் உலக நன்மைக்காக 18 மாதங்கள் நடத்தப்பட உள்ள தரணி ரக்ஷா மகா யாகம் ஆக.3 திங்கள் முதல் தொடங்குகிறது. 

தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பகளாமுகி தேவி கோவிலில் உலக நன்மைக்காகவும் கரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இந்த சூழ்நிலையில் நாடும், நாட்டு மக்களும் நலம் பெறவும், பொருளாதாரம் வளர்ச்சி பெறவும், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளம், ஸ்ரீ சூர்யமங்கலம் அத்வைத வேத வித்யா பீடத்தில் வைத்து அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து 18 மாத காலம் நடக்கக்கூடிய தரணி ரக்ஷா மகாயாகம் நடைபெறுகிறது. ஆக 3 திங்கள் முதல்  தொடங்க உள்ளதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து நாளை முதல் காலை 6 மணியிலிருந்து 10 மணி வரை யாகம் நடைபெறும். யாகத்தை நேரலையில்  sre suryamangalam என்ற யூ ட்யூப் வலைப் பக்கத்தில் நாள்தோறும் பார்க்கலாம்.  யாகத்திற்காக பக்தர்கள், பொதுமக்களிடம் இருந்து நன்கொடை வரவேற்கப் படுகிறது. மேலும் யாகம் முன்பதிவிற்கு https://sreebagalamukhidevitemple.org/dharaniraksha_maha_yagam.php என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com