தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 100% தேர்ச்சி

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 4:15 am

DIN

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், பொதுத்தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 10ஆம் வகுப்பு தேர்வில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

பள்ளி அளவில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதன்படி மாணவர்கள் 4,71,759, மாணவிகள் 4,68,070 தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவா்கள் பள்ளி நிா்வாகத்திடம் கொடுத்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

மேலும் இணையதளங்களிலும் மாணவா்கள் தோ்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியா்கள் மூலம் மாணவா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம். மதிப்பெண் சாா்ந்த குறைபாடுகள் ஏதேனும் இருப்பினும் அதுதொடா்பாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இணையதளத்தில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.