கேட்டூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மீனவ தொழிலாளர்கள்
கேட்டூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மீனவ தொழிலாளர்கள்

கோட்டூரில் மீனவத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூரில், தேசிய மீன்வளக் கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சிஐடியு மீனவத் தொழிலாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூரில், தேசிய மீன்வளக் கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சிஐடியு மீனவத் தொழிலாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், புதன்கிழமை நடைபெற்றது.

கடல் வளத்தையும், உள்நாட்டு மீன் வளத்தையும் தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மீன்பிடித் தொழிலையும் , மீனவத் தொழிலாளர்களையும் பாதுகாத்திட வேண்டும். தேசிய மீன்வளக் கொள்கை வரைவு அறிக்கை 2020 எக்காரணம் கொண்டும் மத்திய , மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தக் கூடாது. 

இத் திட்டத்தினை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய மீனவத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வி.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

கோரிக்கையை விளக்கி, சிபிஐ ஒன்றிய செயலர் க.மாரிமுத்து , ஒன்றியக் குழுத் தலைவர் மு .மணிமேகலை , மாவட்ட ஊராட்சி தலைவர் இ. மஞ்சுளா உள்ளிட்டோர் பேசினர். இதில் , மீனவ தொழிலாளர் சங்க ஒன்றிய செயலர் கே.பாலமுருகன், பொருளாளர் ஏ.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com