நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் - துணை முதல்வர்

நாட்டு மக்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். 
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Updated on
1 min read

நாட்டு மக்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை தகர்த்தெறிந்து, நம் தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வேளையில், மாண்புமிகு அம்மா அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளை சிறப்பிக்க திருவுருவச் சிலைகள், மணி மண்டபங்கள் அமைத்தல், தியாகிகள் ஓய்வூதியத் தொகை உயர்த்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்பதை நினைவுகூர்வதில் மகிழ்கிறேன்.

இப்பொன்னாளில், விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளை போற்றி வணங்கி, தாய்த்திருநாடும், நம் தமிழ்நாடும் வளம் பெற ஒற்றுமையாய் உழைத்திட உறுதியேற்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com