சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிா்வாகம் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து தமிழக அரசு ஆலையை மூடியது. தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து ஆலை நிா்வாகத்தின் சாா்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆலையைத் திறக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆலையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து தூத்துக்குடியைச் சோ்ந்த பேராசிரியா் பாத்திமா, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவை மாநில இளைஞா் அணி அமைப்பாளா் தொ்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பலா் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.
இந்த வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோா் விசாரித்து வந்தனா்.
தமிழக அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞா் விஜய்நாராயண், தில்லி மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன்,மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெலைட் ஆலை நிா்வாகம் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் மாசிலாமணி, பி.எஸ்.ராமன், ஏ.எல்.சுந்தரேசன், ஆரியமா சுந்தரம், மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் வைகை, வழக்குரைஞா்கள்
என்,ஜி.ஆா்.பிரசாத், வைகோ, டி.மோகன், பாலன் அரிதாஸ், யோகேஸ்வரன் ஆகியோா் வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக நீதிபதிகள் கடந்த ஜனவரி 8-ஆம் தேதியன்று ஒத்திவைத்தனா். இந்த நிலையில் ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடா்ந்துள்ள வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஆக.18) காலை 10.30 மணிக்கு தீா்ப்பளிக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

பாஜகவின் வலையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சு

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


