தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தீர்ப்பு நகல் கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: ஸ்டெர்லைட்

தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஸ்டெர்லைட் நிறுவன தலைமை செயல் அலுவலர் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.

News image

செய்தியாளர்களைச் சந்தித்த பங்கஜ் குமார்

Updated On :18 ஆகஸ்ட் 2020, 8:40 am

தூத்துக்குடி:  தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஸ்டெர்லைட் நிறுவன தலைமை செயல் அலுவலர் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு விதித்த உத்தரவுக்கு எதிராக ஆலை நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் பிறப்பித்த உத்தரவில், ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, ஆலையைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் ஆலையின் தலைவர் பங்கஜ் குமார் மற்றும் துணை தலைவர் தனவேல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்ற பங்கஜ்குமார்,  ஸ்டெர்லைட் ஆலையை நம்பி இருந்த ஏறத்தாழ ஒரு லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த தீர்ப்பு தொடர்பான நகல் கிடைத்த பிறகு முழு விவரத்தை பார்த்து சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.