சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்திருக்கும் தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்கக் கிடைத்த வெற்றி என்று மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிர்வாகம் தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் பிறப்பித்த உத்தரவில், ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுடி செய்து ஆலையைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தீர்ப்பளித்தனர்.
இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் வைகோ, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதிக்குக் கிடைத்த வெற்றி, மக்கள் பேராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி, அனைத்துத் தரப்பு மக்களும் நடத்திய போராட்டத்துக் கிடைத்த வெற்றி, 13 உயிர்கள் பலியாகிற்றே அவர்கள் சிந்திய ரத்தத்துக்குக் கிடைத்த நீதி.
கடந்த 26 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இடைவிடாத போராட்டங்கள், எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்த மதிமுகவுக்கு இதை விட மகிழ்ச்சியான செய்தி வேறொன்றும் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

பாஜகவின் வலையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சு

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


