ஆண்டிபட்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர்.
Updated on
1 min read

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் பிரேம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் அந்த அமைப்பினர் பலர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com