

சென்னை: மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமாரின் உடல், தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காமராஜர் அரங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிறகு உடனடியாக சொந்த ஊர் கொண்டு செல்லப்படுவதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தியாகராயர் நகரில் உள்ள வசந்தகுமாரின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு சத்தியமூர்த்தி பவனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், வசந்தகுமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல காலதாமதம் ஆகும் என்பதால், வசந்தகுமாரின் இல்லத்தில் இருந்து அவரது உடலானது சொந்த ஊருக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்படுகிறது. செல்லும் வழியில் காமராஜர் அரங்கத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த காமராஜர் அரங்கத்துக்கு விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.