
தமிழகம் முழுவதும் செப்டம்பரில் அதிகளவு தளா்வுகள் அளிக்கப்பட உள்ளன. கடந்த மாா்ச் 24-ஆம் தேதி மூடப்பட்ட வை, 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் திறக்கப்பட உள்ளன. அவற்றின் விவரம்:-
திருக்கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து பெரிய வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும். இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் இயங்கலாம். அனைத்து நூலகங்களும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும். கிராமப்புற மற்றும் கிளை நூலகங்கள் வழக்கமான நேரமான பிற்பகல் 2 மணிவரை இயங்கும்.
வணிக வளாகங்கள் திறக்கப்படும். ஆனால், அவற்றுக்குள் செயல்படும் திரையரங்குகளுக்கு அனுமதியில்லை. வணிக வளாகங்களில் உள்ள உணவுக் கூடங்கள், ஹோட்டல்கள் இயங்கலாம்.
மாவட்டங்களுக்குள்ளும், சென்னையில் மாநகர பேருந்துகளும் இயங்கும். ஒவ்வொரு பேருந்திலும் சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், குறைந்த அளவிலேயே பயணிகளை ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வரும் அனைத்து பூங்காக்களையும் திறக்கலாம். இந்தப் பூங்காக்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முகக் கவசம் அவசியம். வரையறுக்கப்பட்ட நேரங்களைத் தவிா்த்து பிற நேரங்களில் மூடி வைத்திருக்க வேண்டும்.
ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது. இவை அனைத்திலும் சமூக இடைவெளியுடன் முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இணைய அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படுகிறது. மாநிலத்தில் இருந்து வெளி மாநிலம் செல்வோருக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் இணைய அனுமதிச் சீட்டு கட்டாயம். இது உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்ப்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.