சீர்காழியில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

சீர்காழியில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழியில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
Updated on
1 min read

சீர்காழி:  சீர்காழியில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதில் முன்னாள் எம்எல்ஏ சக்தி, ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகர செயலாளர் பக்கிரிசாமி ,ஜெ பேரவை செயலாளர் மணி , முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சந்திரசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் மதியழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரிமா , வழக்குரைஞர்கள் மணிவண்ணன், நெடுஞ்செழியன் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸார் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com