ஆண்டிபட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமர் தலைமை வகித்தனர். இப்போராட்டத்தின் போது மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

இதனையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com