
கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தை கண்டித்து கம்யூனிஸ்ட்டு கட்சியினர் மறியல் செய்தனர், 52 பேர்களை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தை கண்டித்து சி.பி.எம். நாகராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. ஜெயன், மக்கல் அதிகாரம் ராஜேந்திரன், அகில இந்திய பா்வர்டு பிளாக் மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டு கூடலூர் குமுளி பிரதான சாலையில் மறியல் செய்தனர்.
கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கே.முத்துமணி தலைமையில் போலீசார் இரண்டு பெண்கள் உள்பட 52 பேர்களை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.