நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.


நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.
வேதாரண்யம் பகுதியில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை சில படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீனவர் தங்கம் உள்பட 3 மீனவர்கள் சென்ற கண்ணாடியிழைப் படகு நடுக்கடலில் வீசிய பலத்தக் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த சக மீனவர்கள் வேறு படகுகளில் விரைந்து சென்று, கடலில் தத்தளித்த 3 பேரையும் படகுடன் மீட்டு, கரைக்கு
கொண்டுவந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...