பாதாள சாக்கடை குழியில் முதியவர் மரணமா? - சென்னை மாநகராட்சி மறுப்பு

சென்னை கோடம்பாக்கம் அருகே பாதாள சாக்கடை குழியில் விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
பாதாள சாக்கடை குழியில் முதியவர் மரணமா? - சென்னை மாநகராட்சி மறுப்பு


சென்னை: சென்னை கோடம்பாக்கம் அருகே பாதாள சாக்கடை குழியில் விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம், மேம்பாலம் அருகே இருக்கும் நடந்து செல்லும்போது முதியவர் நரசிம்மன் கழிவுநீர் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த காவலர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அண்மையில் நொளம்பூரில் கால்வாயில் தவறி விழுந்த தாய், மகன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு உயிரிழப்பு சம்பவம் சென்னை வாழ் மக்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 

சாலைகள் அடிக்கடி தோண்டுவதும், அதனை மூடமாலும், முறையாக பராமரிக்கப்படாததால் இது போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் தொடருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடந்து செல்லும்போது பாதாள சாக்கடை குழி பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவத்துக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. 

நரசிம்மன்  பாதாள சாக்கடை குழி பள்ளத்தில் விழுந்ததால் உயிரிழக்கவில்லை என்றும் அவரது மரணத்திற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருக்கக்கூடும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com