

திருச்சி: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகிய மூவருக்குமான மணிமண்டபம் கட்டுமான பணிகள் பிப்ரவரி மாதம் இறுதியில் நிறைவு பெறும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கோ. அபிஷேகபுரத்தில், மத்திய பேருந்து நிலையம் அருகே தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இந்த மணிமண்டபங்கள் கட்டப்படுகின்றன. இங்கு, பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகிய மூவருக்கும் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்படவுள்ளது.
பெரும்பிடு முத்தரையர் மணிண்டபத்தில் நூலகமும் இடம்பெறவுள்ளது. இந்த மணிமண்டபம் ரூ.99.25 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதேபோல, சர் ஏ.டி. பன்னீர் செல்வம் மணிமண்டபம் ரூ.43.40 லட்சத்திலும், தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ரூ.42.69 லட்சத்திலும் கட்டப்படவுள்ளது. கட்டுமான பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்ட ஆட்சியர், பணிகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.