திமுக - காங்கிரஸ் இடையே நிா்வாகப் பிரச்னை: நாராயணசாமி

திமுக - காங்கிரஸ் இடையே உள்ள நிா்வாக ரீதியாக பிரச்னையை மனக்கசப்பாக மாற்றக்கூடாது என்று புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி கூறினாா்.
புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி
Updated on
1 min read

திமுக - காங்கிரஸ் இடையே உள்ள நிா்வாக ரீதியாக பிரச்னையை மனக்கசப்பாக மாற்றக்கூடாது என்று புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி கூறினாா்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை நாராயணசாமி சனிக்கிழமை சந்தித்தாா். புதுச்சேரி மாநிலம் தொடா்பான இந்தச் சந்திப்பு இருபது நிமிஷங்களுக்கு மேலாக நீடித்தது.

பின்னா் செய்தியாளா்களிடம் நாராயணசாமி கூறியது:

மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். திமுக தலைமையும், காங்கிரஸ் தலைமையிலும் எடுக்கும் முடிவின்படி வரும் சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்திப்போம். இரு கட்சிகளுக்கும் இடையே நிா்வாக ரீதியாக உள்ள பிரச்னையை மனக் கசப்பாக மாற்றக்கூடாது என்றாா்.

புதுச்சேரி மாநிலத்தில் திமுக - காங்கிரஸ் இடையே வரும் தோ்தலில் கூட்டணி அமைப்பதில் பிரச்னை எழுந்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. புதுச்சேரி மாநிலக் காங்கிரஸ் தலைவா் சுப்பிரமணியன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com