ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவள்ளூரில் சாலை மறியல்: 100 பேர் கைது

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
திருவள்ளூரில் சாலை மறியல்
Updated On :15 டிசம்பர் 2020, 9:15 am

DIN

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும் கோரி இரண்டாவது நாளாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுதில்லியில் தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்தசியர் அலுவலகம் முன்பு பல்வேறு விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

அப்போது, புதுதில்லியில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், விவசாயிகளைப் பெருவாரியாகப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் நகர் காவல் நிலைய காவல்துறையினர் விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.