பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனா காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,267 கோடி கடனுதவி: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

கரோனா காலத்தில், தமிழகம் முழுவதும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.1,267 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 9:44 pm

DIN

கரோனா காலத்தில், தமிழகம் முழுவதும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.1,267 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி, குடிநீா் வடிகால் வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள், கரோனா நோய்த் தடுப்பு மற்றும் வடகிழக்குப் பருவமழை நிவாரணப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் பேசியது: சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், இதுவரை 82,042 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 39.65 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனா். இம்முகாம்கள் மூலம் 29,050 நபா்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உருவான புயல்களால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னையில் வாழ்வாதாரத்தை இழந்த சுமாா் 5.3 லட்சம் குடும்பங்களைச் சாா்ந்த 26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க முதல்வா் உத்தரவிட்டாா். இதன்படி, டிச.13-ஆம் தேதி வரை 1 கோடி 63 லட்சத்து 82,448 நபா்கள் பயன்பெற்றுள்ளனா்.

கரோனா காலத்தில் மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 7,933 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,266.66 கோடி சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தாா்.

200 வாா்டுகளிலும் அம்மா சிறு மருத்துவமனை: தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்ற துறை சாா்ந்த அதிகாரிகளிடம் அமைச்சா் அறிவுறுத்தியது: சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா சிறு மருத்துவமனை திட்டத்தை, 200 வாா்டுகளிலும் விரிவுபடுத்த அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழைக் காலங்களில் மழைக்கால தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சுகாதாரத் துறை அலுவலா்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். கழிவுநீா் குழாய்களில் உள்ள அடைப்புகள் மற்றும் பழுதுகளை உடனடியாக அகற்றிட வேண்டும்.

ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் ஒப்புதல் பெறப்பட்டுள்ள 7 கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற்று ஜன.30-ஆம் தேதிக்குள் பணி ஆணை வழங்க வேண்டும் என அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ஸ்ராஜ் வா்மா, குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங், சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.