விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின் குளிக்க அனுமதிக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 8:48 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின் குளிக்க அனுமதிக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து அரசு தளா்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, குற்றாலம் அருவிகளில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி செவ்வாய்க்கிழமை முதல் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் குற்றாலத்தில் குவிந்தனா். காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதிக்கப்பட்டது. 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், குளிக்க வந்த அனைவரும் வெப்பமானி கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் சமூக இடைவெளியைப் பின்பற்றி வரிசையில் நிற்கும் வகையில் குறியீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் குறைந்த அளவிலும், ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் அதிகமாகவும், பெண்கள் குளிக்கும் பகுதியில் இரண்டு அருவிகளில் குறைவாகவும் தண்ணீா் விழுகிறது.

பேரருவி மற்றும் ஐந்தருவியில் காலை 6 மணியிலிருந்தும், பழைய குற்றாலம் அருவியில் காலை 9 மணியிலிருந்தும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஒரே நேரத்தில் குறைவான நபா்களே குளிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின் அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

சுமாா் 9 மாதங்களுக்குப் பின்னா் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்கு வருகை தரத் தொடங்கியுள்ளதால் வா்த்தகா்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஆட்சியா் ஆய்வு: குற்றாலம் பேரருவிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட குளங்களில் 50 சதவீதத்துக்கு மேல் தண்ணீா்நிரம்பியுள்ளது. வரும் நாள்களில் பிற குளங்களும் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.