சின்னமனூர் அருகே வேளாண் அறிவியல் மையத்தில் விழிப்புணர்வு முகாம்

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம்  சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளின் வேலைப்பளுவை குறைக்கவும், பழம் மற்றும் காய்கறிகளில் ஏற்படும் சேதாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு முகாம்
காமாட்சிபுரம் சென்டெக்ட்  வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்.
காமாட்சிபுரம் சென்டெக்ட்  வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்.


உத்தமபாளையம்: சின்னமனூர் அருகே காமாட்சிபுரம்  சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளின் வேலைப்பளுவை குறைக்கவும், பழம் மற்றும் காய்கறிகளில் ஏற்படும் சேதாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் சேர்மன் பச்சைமால் பழம் மற்றும் காய்கறி பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். முன்னாள் வேளாண் இணை இயக்குநர் ராஜாராம் சிறப்புரை ஆற்றினார். 

கேரளம் மாநிலம் அசோக் தாகூர் மற்றும் ஷாஜி வர்கீஸ் ஆகியோர் பழம் மற்றும் காய்கறிகளின் தொழில்நுட்பங்கள் மற்றும் செயல் முறை விளக்கம் அளித்தனர்.

இம்முகாமில் ,தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயிகள் மற்றும்  சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியாளர் மைதிலி மற்றும் மதுரை பாத்திமா கல்லூரி மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com