சிறுமுகை அருகே சாலையை கடந்த முதலை: கிராம மக்கள் அச்சம்

சிறுமுகை அருகே பவானிசாகர் நீர்த்தேக்கத்தின் பின் பகுதியில் உள்ள 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதால் அச்சமடைந்துள்ளனர்.
சிறுமுகை அருகே சாலையை கடந்த முதலை
சிறுமுகை அருகே சாலையை கடந்த முதலை
Published on
Updated on
1 min read


சிறுமுகை அருகே பவானிசாகர் நீர்த்தேக்கத்தின் பின் பகுதியில் உள்ள 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதால் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே பவானிசாகர் நீர்த்தேக்கத்தின் பின் பகுதியில் 100க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட லிங்காபுரம், மொக்கமேடு, காந்தவயல், உளியூர், காந்தையூர் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் லிங்காபுரம் பகுதியில் இருந்து மொக்கமேடு இடையே செல்லும் நடைபாதை பவானிசாகர் நீர்தேக்க பகுதியின் மைய பகுதியில் உள்ளது. இச்சாலை வழியாக காந்தையூர், உளியூர், காந்தவயல் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். 

இந்நிலையில் புதன்கிழமை இரவு வேலை முடிந்து மேற்கண்ட கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கரையோரத்தில் முதலை ஒன்று படுத்திருந்ததை பார்த்த மக்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

வெகுநேரமாக அந்த முதலை சாலையில் படுத்திருந்ததால் செய்வதறியாது தவித்த மக்கள் காத்திருந்து அந்த முதலை மீண்டும் தண்ணீருக்குள் சென்ற பிறகு சாலையை கடந்து சென்றனர்.

இச்சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மட்டுமல்லாமல் விவசாயிகளும் அதிகளவில் சென்று வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் இந்த சாலையே முழுவதுமாக மூடப்படும் போது மக்கள் போக்குவரத்து பரிசல் பயணமாகதான் இருக்கும், சில நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரிலேயே நடந்து செல்ல வேண்டியுள்ள நிலையில், கரையின் ஒரத்தில் முதலை இருப்பது பாதசாரிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பொதுப்பணித்துறையினர் முதலையை பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும் என சுற்று வட்டார கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com