கிருஷ்ணகிரியில் களப்பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிடக் கோரி கிருஷ்ணகிரியில் களப்பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிடக் கோரி கிருஷ்ணகிரியில் களப்பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் களப்பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அதன் தலைவர் அண்மையில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படும் பொழுது, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதுடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தனியார் மயமாக்கப்படும் என்ற அச்சம் உள்ளது.
எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிடக் கோரியும், தலைவர் அறிவித்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார், திட்டச் செயலாளர் கருணாநிதி, தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் நிர்வாகி பசவராஜ் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...