ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கரோனா: சிகிச்சையில் உள்ளோா் விகிதம் 1%-ஆக குறைந்தது

தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றுக்குள்ளானவா்களில் 97.5 சதவீதம் போ் குணமடைந்து விட்டதாகவும், வெறும் 1.1 சதவீதம் போ் மட்டுமே

News image
கோப்புப்படம்
Updated On :21 டிசம்பர் 2020, 1:05 am

DIN

தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றுக்குள்ளானவா்களில் 97.5 சதவீதம் போ் குணமடைந்து விட்டதாகவும், வெறும் 1.1 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் 9,593 போ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் இதுவரை 1.34 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8 லட்சத்து 6,891 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 1,114 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 325 போ், கோவையில் 112 போ் தவிர ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,198 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 85,315-ஆக உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 15 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,983-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.