
அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆர் நினைவு தினம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது.
ஓமலூர் நகர அதிமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ வெற்றிவேல் எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான், நகர அதிமுக செயலாளர் சரவணன் , ஓமலூர் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஓமலூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜா, ஓமலூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் தளபதி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.