வைகுண்ட ஏகாதசி: திருவள்ளூர் வீரராகவ கோவிலில் பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவ கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
திருவள்ளூர் வீரராகவ கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
திருவள்ளூர் வீரராகவ கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

திருவள்ளூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவ கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியின் கரோனா நோய்த்தொற்று அரசின் விதிமுறைகளை பின்பற்றும் வகையில் பக்தர்கள் அனுமதிக்காத நிலையில், 6 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் வீரராகவ திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலகாலமாக நடைபெறுவது வழக்கமாகும். ஆனால், நிகழாண்டில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.

அதை பின்பற்றி இக்கோவிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பக்தர்கள் அனுமதிக்காமல் சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிகாலை 5 மணிக்கு கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அப்போது, வண்ணமலர்களால் ஆன  சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து கோவிந்தா கோஷத்துடன் பல்லக்கில் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளினார்.

இதில் கரோனா நோய்த்தொற்று காரணமாக அரசின் வழிகாட்டு பின்பற்றும் நோக்கத்திலேயே பக்தர்கள் அனுமதிக்காத நிலையில், திருக்கோவில் நிர்வாகத்தினர், முக்கியஸ்தர்கள் மற்றும் சேவகர்கள் உள்ளிட்டோர் என குறைந்த அளவிலேயே இருந்தனர். அதைத் தொடர்ந்து காலையில் 6 மணி முதல் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

அப்போது, பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.    

இதேபோல், திருவள்ளூர் புங்கத்தூர் பெருமாள் கோவில், காக்களூர் பூங்கா நகர் சிவ-விஷ்ணு கோவில், நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com