மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு ரூ.161 கோடிக்கு விற்பனை

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், நெவர்லாந்தில், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமாக 2 ஆயிரத்துக்கு 700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பண்ணை வீட்டை தொழிலதிபர் ஒருவர் ரூ.161 கோடிக்கு வாங்கியுள்ளார
மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு ரூ.161 கோடிக்கு விற்பனை
மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு ரூ.161 கோடிக்கு விற்பனை


அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், நெவர்லாந்தில், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமாக 2 ஆயிரத்துக்கு 700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பண்ணை வீட்டை தொழிலதிபர் ஒருவர் ரூ.161 கோடிக்கு வாங்கியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பராக அறியப்படும் ரோன் பர்க்கிள் என்ற தொழிலதிபர் அந்த பண்ணை வீட்டை விலைக்கு வாங்கியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மைக்கேல் ஜாக்சன் தத்தெடுத்து வளர்த்து வந்த குழந்தைகள் வசிப்பதற்காக இந்த பண்ணை வீடு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது விற்பனை செய்யப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த பண்ணை வீட்டில் தான் தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஜாக்சன் மீது குற்றச்சாட்டு எழுந்து அது பெரிய அளவில் சர்ச்சைய எழுப்பிய நிலையில், இந்த பண்ணை வீட்டையே ஜாக்சன் முற்றிலும் வெறுத்து வந்தார்.

மைக்கேல் ஜாக்சன் பண்ணை வீடு பல்வேறு சிக்கல்களில் சிக்கிய நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த வீட்டை  22 மில்லியன் டாலர் அதாவது 161 கோடி ரூபாய்க்கு அவரது நண்பரே வாங்கியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நெவர்லாந்து பண்ணை வீட்டை, மைக்கேல் ஜாக்சன் 1987-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினார். அதில், பொழுதுபோக்குப் பூங்கா, உயிரியல் பூங்கா, விளையாட்டு மைதானங்கள் என பலவும் இருக்கும். 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் இந்த நெவர்லாந்து பண்ணையானது ஜாக்சன் மீதான பல்வேறு பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மீதான விசாரணைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com