தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருச்சுழி அருகே தனியார் பஞ்சாலைப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 9 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் பனையூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் பஞ்சாலைத் தொழிலாளர் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஓட்டுநர் உள்பட

News image
விபத்துக்குள்ளான தனியார் பஞ்சாலைத் தொழிலாளர் பேருந்து. ​
Updated On :27 டிசம்பர் 2020, 4:59 am

DIN


அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் பனையூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் பஞ்சாலைத் தொழிலாளர் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஓட்டுநர் உள்பட 9 பேர் காயமடைந்தனர். 

திருச்சுழி வட்டம் செல்லையாபுரத்திலிருந்து வழக்கமாக பந்தல்குடி தனியார் பஞ்சாலைப் பேருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லுமாம். ஞாயிற்றுக்கிழமை காலையும் அப்பேருந்து செல்லையா  புரத்திலிருந்து ஓட்டுநர் உள்பட 11 பேருடன் சென்றுகொண்டிருந்தபோது பனையூர் சாமிநத்தம் விலக்கு அருகே  எதிர்பாராவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், செல்லையாபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பூசையா (29) என்பவரும், செல்லையாபுரத்தைச் சேர்ந்த சின்னராசு மகன் ஸ்ரீகாந்த் (18) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஓட்டுநர் உள்பட 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பேருந்து விபத்து குறித்து வழக்குப்பதிந்த திருச்சுழி காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.