

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பத்தாம் பத்திநாதர் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில், இயேசு கிறிஸ்து பிறப்பைச் சித்தரித்து, 2D தொழில்நுட்பத்தில் தத்ரூபமாகப் பல வண்ண கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குடிலைக் காண, மத வேறுபாடின்றி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நூற்றாண்டு பழமையான பத்தாம் பத்திநாதர் கத்தோலிக்கக் கிருத்துவ ஆலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றுள்ள மூத்த பாதிரியார் அ.சிங்கராயன், இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில், புதுமையான கிறிஸ்மஸ் குடில் அமைக்க முடிவு செய்தார்.
இதனையடுத்து, பத்தாம் பத்திநாதர் கோவில் வளாகத்தில், மரியன்னை, குழந்தை இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, 3 ஞானிகள் சந்திப்பு உள்ளிட்ட காட்சிகள் தத்ரூபமாகச் சித்தரித்து பல வண்ணத்தில், 2D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மறை மாவட்ட அளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள, இந்த கிறிஸ்மஸ் குடில் குறித்து தகவல் அறிந்த கிறிஸ்துவ இன மக்கள் மட்டுமின்றி, மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும், குழந்தைகளுடன் ஆர்வத்தோடு சென்று கண்டுகளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.