உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் 3 மணி நேரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையாகியுள்ளது.


உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் 3 மணி நேரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமைதோறும் வாரசந்தை நடப்பது வழக்கம். இதனுடன் ஆட்டுசந்தையும் நடந்து வருகிறது. தமிழகத்தின் முக்கிய ஆட்டு சந்தைகளில் உளுந்தூர்பேட்டை சந்தையும் ஒன்றாகும். வரும் வெள்ளிக்கிழமை ஆங்கில புத்தாண்டு கொண்டாட உள்ள நிலையில், அன்றைய தினம் அதிக இறைச்சி விற்பனை ஆவது வழக்கம். இதற்காக இன்று உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் கூடிய ஆட்டுச் சந்தையில், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருவெண்ணைநல்லூர், திருக்கோவிலூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை சந்தைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
ஆட்டின் விலை ரூ. 5000 முதல் 12 ஆயிரம் வரை விற்கப்பட்டது. அதன்படி சுமார் நான்காயிரம் ஆடுகள் 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. இதனால் உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. வழக்கமாக ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது ரூ.12 ஆயிரம் வரை விற்றதால், விலை கூடுதலாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்றைய ஆட்டுச் சந்தையில் கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, சேலம், புதுச்சேரி, செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
விவசாயிகளும், வியாபாரிகளும் உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் குவிந்ததால் சந்தை களைகட்டியது. அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா ஆடுகளுக்காக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளும் சந்தைக்கு வந்து நான்கு ஆடுகள் வீதம் 800 ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் 3 மணி நேரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமைதோறும் வாரசந்தை நடப்பது வழக்கம். இதனுடன் ஆட்டுச்சந்தையும் நடந்து வருகிறது. தமிழகத்தின் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் உளுந்தூர்பேட்டை சந்தையும் ஒன்றாகும். வரும் வெள்ளிக்கிழமை ஆங்கில புத்தாண்டு கொண்டாட உள்ள நிலையில், அன்றைய தினம் அதிக இறைச்சி விற்பனை ஆவது வழக்கம். இதற்காக இன்று உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் கூடிய ஆட்டுச் சந்தையில், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருவெண்ணைநல்லூர், திருக்கோவிலூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளைச் சந்தைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
ஆட்டின் விலை ரூ. 5000 முதல் 12 ஆயிரம் வரை விற்கப்பட்டது. அதன்படி சுமார் நான்காயிரம் ஆடுகள் 3 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. இதனால் உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. வழக்கமாக ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது ரூ.12 ஆயிரம் வரை விற்றதால், விலை கூடுதலாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்றைய ஆட்டுச் சந்தையில் கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, சேலம், புதுச்சேரி, செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
விவசாயிகளும், வியாபாரிகளும் உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் குவிந்ததால் சந்தை களைகட்டியது. அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா ஆடுகளுக்காக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளும் சந்தைக்கு வந்து நான்கு ஆடுகள் வீதம் 800 ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...