
சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் புதன்கிழமை ஆருத்ரா தரிசனம் நடந்தது. குளிரையும் பொருள்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை வணங்கி சென்றனர்.
சேலம் டவுன் பகுதியில் உள்ள சுகவனேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி நள்ளிரவில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதன் பின்னர் சிறப்பு அலங்காரம் நடந்தது.
இந்த ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை .
கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் விடிய விடிய நடந்தது.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை அதிகாலை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
இதன் பின்னர் இன்று காலை 7 மணி அளவில் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்து நீண்ட கியூ வரிசையில் நின்று ஒவ்வொருவராக கோவிலுக்குள் சென்று சாமியை வணங்கி சென்றனர்.
முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே சாமியை வணங்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி புதன்கிழமை சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள வழிகளில் வரிசையாக சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள்.
கோவிலுக்கு முன்புறம் கோவில் அதிகாரிகள் நின்று உடல் வெப்ப கருவி மூலம் பரிசோதித்து பின்னர் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதித்தனர்.
சுகவனேஸ்வரர் கோவிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனத்தில் வழக்கமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணத்தால் குறைவான அளவே பக்தர்கள் வந்து சாமியை வணங்கி சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.