

உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்து பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயில். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக லட்சுமி நரசிம்மர் கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக நேற்று பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டு பல்வேறு கால பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்துகொண்டு குடமுழுக்கு விழாவைத் தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக போலீஸார் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.