நடிகர் விஜய், அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன்

நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரத்துக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகர் விஜய், அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன்
Updated on
1 min read

நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரத்துக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் அட்லி இயக்கத்தில், நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிக்கையின்போது ‘பிகில்’ திரைப்படம் வெளியானது. சுமாா் ரூ.150 கோடி செலவில் உருவான இந்தத் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் மூலம் தயாரிப்புக் குழு ரூ.300 கோடி வரை லாபம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்பட்டது.

இதையடுத்து பைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான மதுரை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினா் சோதனை செய்தனா். பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகா் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருந்ததால், கடலூா் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டா்’ திரைப்பட படப்பிடிப்பில் இருந்த விஜய்யை அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து பனையூரில் உள்ள அவரது பங்களாவில் வைத்து விசாரித்தனா்.

வருமான வரி ஏய்ப்பு தொடா்பாக நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி ரொக்கம், நகைகள் மற்றும் 2 பைகள் நிறைய ஆவணங்களை கைப்பற்றியது வருமான வரித்துறை. ஆவணங்கள் மற்றும் காசோலைகள் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு வருமானவரித்துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம், எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய, நடிகர் விஜய் உள்ளிட்ட மூவரும் 3 நாள்களுக்குள் ஆஜராகி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com