

சென்னை: ஜாதி, மொழி பெயரைச் சொல்லி மக்களைத் துண்டாடும் அரசுகள்தான் இந்தியா முழுவதும் இருந்து வருவதாக தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 118 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
தமிழகத்திலேயே உயரமான கொடி தேமுதிக அலுவலகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் கடை, கடையாக வசூல் செய்து கட்சி விழாவை நடத்துகின்றன. ஆனால் தேமுதிகவில் அவ்வாறு இல்லை
மற்ற மாநிலங்களில் யார் முதலமைச்சராக வந்தாலும், விஜயகாந்த் அறிவித்த கொள்கையை தான் அவர்கள் பயன்படுத்தி வருகிறாரகள். வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று விஜயகாந்த் கூறிய திட்டத்தையே, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடைபிடித்து வருகிறார். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கட்சி துவங்கிய அரவிந்த் கேஜரிவால் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்
நல்ல ஆட்சியை மக்கள் புரிந்துக்கொண்டு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஜாதி, மொழி பெயரை சொல்லி மக்களைத் துண்டாடும் அரசு தான் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. கொடியிலேயே தேமுதிகவின் மொத்த கொள்கையும் அடங்கி உள்ளது. தேமுதிகவிற்கு என்ன கொள்கை என்று யார் கேட்டாலும் அவர்களுக்கு இந்த விளக்கமே போதுமானது என்று நினைக்கிறேன்.
மேலும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கும் வகையில் வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றிகளை கூறிக் கொள்கிறேன். தேமுதிக கட்சியை நான்கு புறமும் சூழ்ச்சியால் அடைத்தாலும், இன்று மீண்டு வந்துள்ள விஜயகாந்த் 2021 தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.