ஜெ.பிறந்தநாள்: கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 
ஜெ.பிறந்தநாள்: கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
Updated on
1 min read

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி 6வது வார்டைச் சேர்ந்த அம்மா சேவா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சோனாலி பிரதீப் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி கலந்துகொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

நான் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். தொடர்ந்து மக்களுக்காக அரும்பணி ஆற்ற வேண்டும் என்று உறுதியுடன் தெரிவித்தார். 

மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை ஆறுக்குட்டி தொடங்கி வைத்தார். பெண்கள் 172 பேருக்கு சேலை வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் 172 நபர்களுக்கு பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பு சுமார் 50.000 ஆயிரம் ரூபாய் ஆகும்

இதில், பகுதிச் செயலாளர் சின்னசாமி, வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் முருகேஷ் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com